Testimonies

Healing From Dengue

Praise the Lord. I’m Blessy. We live in Nedungundram, Chennai. My brother Roshan (aged 10) was afflicted with Dengue fever. He was admitted in ICU in a very critical stage. With much agony and fear we contacted Kirubai TV for prayers. The Kirubai TV Prayer Executives offered the Prayer of Faith and told, “The God who healed me from Dengue when I was in my death bed and the God who enabled me to pray for your brother today will surely grant perfect healing to Roshan”. These words brought a new kind of encouragement and faith within me. We as a family prayed in one accord with faith. The Lord heard our prayers and granted perfect healing to my brother and brought him back to home with good health. Glory be to God who healed my brother.

டெங்கு காய்ச்சலிலிருந்து குணம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். என்னுடைய பெயர் பிளெஸ்ஸி. நாங்கள் குடும்பமாய் சென்னையில் உள்ள நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வருகிறோம். என்னுடைய சகோதரன் ரோஷன்(வயது 10) டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைமையில் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அதிக கலக்கத்தோடு கிருபை டிவியை ஜெபத்துக்காக தொடர்பு கொண்டோம். கிருபை டிவி ஜெப ஊழியர்களும் விசுவாசத்துடன் அதிக பாரப்பட்டு எங்களுக்காக ஜெபித்து, “டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடின என்னை சுகப்படுத்தி இன்று உங்கள் சகோதரனுக்காய் ஜெபிக்க செய்த என் தேவன் நிச்சயமாய் ரோஷனுக்கு பூரண சுகத்தை கொடுப்பார்” என்று சொன்னார்கள். அந்த வார்த்தைகள் ஒரு புது விதமான உற்சாகத்தையும் விசுவாசத்தையும் எனக்குள் கொண்டு வந்தது. குடும்பமாய் நாங்களும் விசுவாசத்தோடு கர்த்தரிடத்தில் ஜெபம் பண்ணினோம். கர்த்தர் எங்கள் ஜெபங்களை கேட்டு என் சகோதரனுக்கு பூரண சுகத்தை கொடுத்து சுகமாய் வீடு திரும்ப உதவி செய்தார். சுகத்தை கொடுத்த கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்.

Healing From Corona

Praise the Lord. I’m Jeevitha Vinoth from Kasi Medu, Chennai. I was afflicted with Covid-19 and contacted Kirubai TV for prayers on 9. 6. 20 with much agony . Kirubai TV prayer executives offered fervent prayers for me. God did miracle in my life. I got healed completely from coronavirus. Glory be to God whose my healer.

Blessing of Child

Praise the Lord. I’m very happy to share my testimony. I’m Mrs. Sandhiya from Arakonam, Tamil Nadu . I was praying for child blessing since 4 yrs. God did miracle in my life. I’m 4 months pregnant now by God’s grace . I’m in contact with Kirubai TV for prayer support from last year. There were times when our expectations turned into disappointments and called in pain&agony for prayers many times. Sister Melinda told me that, the same days next year I will be holding a baby in my hands. I was much comforted through those words of hope from God. My husband and I came for the Kirubai TV Arakonam branch office inauguration prayer and was prayed by Brother Samson. God spoke to me through Brother Samson and said this year I will receive child blessing. Now I boldly testify that this is miracle of God… My due date is Dec 17th 2020, remember my family in your prayers. Thanking God for His blessing always.

Skin Disease Healed

Praise the Lord, I’m Rachel. I live in Tirupur district. For the past two months, I have been ill with a sort of skin disease . My body was full of scars and wounds. Neither Doctors nor myself were able to diagnose the cause of this disease. There was no use in running behind doctors. There was no change in my body with any medication pills. It was very difficult for me as I was having high levels of irritation and pain. I had a lot of pains in my mind. I was depressed in mind. It was very difficult to do the day to day activities. I had great difficulty in changing my clothes and bathing. With much agony I contacted Kirubai TV for prayers on 09.05.2019. Kirubai TV prayer executives offered fervent prayers with much burden. What a miracle! The Lord changed my two-month agony within three days and healed all my wounds. My skin became completely new. I am healthier than before. Blessed be the Lord, who healed me from this skin disease completely. As long as I live, I shall be a living testimony unto the Lord. Amen!

தோல் வியாதியில் இருந்து பரிபூரண விடுதலை 

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். என்னுடைய பெயர் ரேச்சல். நான் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். கடந்த இரண்டு மாதங்களாய் ஒருவிதமான தோல் வியாதியினால் நான் அவதிப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். என்னுடைய மேனி முழுவதும் காயங்கள் நிறைந்த புண்களாய் இருந்தது. இது எதனால் வந்தது என்று எனக்கும் தெரியவில்லை என்னை பரிசோதித்த மருத்துவருக்கும் தெரியவில்லை. பல்வேறு மருத்துவரை தேடி நாடி ஓடியும் எந்த பலனும் இல்லை. எந்த மருந்து மாத்திரைக்கும் என் உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதிகமான எரிச்சல் தன்மையும் அரிப்பும் இருந்ததினால் நான் மிகவும் அவதிக்குள்ளானேன். அதிகமான மனஉளைச்சலுக்கும் உள்ளானேன். சராசரி வேலைகளை செய்வது கூட எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னுடைய உடைகளை மாற்றி கொள்வதிலும் குளிப்பதிலும் நான் அதிக சிரமத்தை அனுபவித்து வந்தேன். இதனிமித்தம் என் மனதில் ஏற்பட்ட காயங்கள் வலிகள் ஏராளமாய் இருந்தது. அதிக மன கலக்கத்தோடு நான் கிருபை டிவியை 09.05.2019 அன்று தொடர்பு கொண்டு எனக்காய் ஜெபிக்க சொல்லி கேட்டேன். கிருபை டிவியிலும் எனக்காக அதிக பாரப்பட்டு உருக்கத்தோடு ஜெபித்தார்கள். எவ்வளவு ஆச்சர்யம் என்னுடைய இரண்டு மாத வேதனையை மூன்றே நாளில் கர்த்தர் மாற்றி என் வாழ்வில் ஒரு பெரிய அற்புதத்தை செய்தார். என்னுடைய சருமம் முழுவதும் புதிதாய் மாறினது. முன்பு இருந்ததை விட ஆரோக்கியமாய் இருக்கின்றேன். மூன்றே நாளில் எல்லா விதமான காயங்கள் புண்கள் முழுவதும் சுகமடைந்து என் சருமம் ஆரோக்கியமாய் மாறி இருக்கின்றது. இந்த தோல் வியாதியில் இருந்து முழுவதுமாய் எனக்கு விடுதலை தந்து சுகமாய் வாழ்ந்திருக்க செய்த கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். நான் என் வாழ்நாள் உள்ளவரை கர்த்தருக்கு ஜீவனுள்ள சாட்சியாய் இருப்பேன். ஆமென்.

Tumour in Stomach Healed

Praise the Lord. My name is Amutha Kamalesh Kumar. I live in Avadi, Chennai. My mother in law Mythili, was having a Tumour in stomach since 2 weeks. The doctor who examined her suspected it to be a cancer, took the samples and gave it for biopsy. As we were waiting for the test reports, I contacted KIRUBAI TV for prayers on 20/4/2019. With much faith, I prayed in union with KIRUBAI TV Prayer Warriors. My hope was not disappointed. God did a big miracle. A surprise awaited in the report which we were waiting for. We prayed to the Lord that the Tumour should not be a Cancerous .But the Lord enabled us to get the report that my mother in law has no Tumour at all. Thanks and Glory to the Lord who did exceeding abundantly above all that we have asked or imagined.

வயிற்று பகுதியில் இருந்த கட்டி மறைத்தது

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். என்னுடைய பெயர் அமுதா கமலேஷ் குமார். சென்னையிலுள்ள ஆவடியில் வசித்து வருகிறோம். என்னுடைய மாமியார் பெயர் மைதிலி. அவர்களுக்கு இரண்டு வாரமாய் வயிற்று பகுதியில் கட்டி இருந்தது. அதை பரிசோதித்த மருத்துவர்கள் கேன்சர் கட்டியாய் இருக்க கூடுமோ என்று எண்ணி என் மாமியாரிடம் பயாப்ஸி டெஸ்ட் எடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். நாங்களும் டெஸ்ட் எடுத்து வந்து ரிபோர்ட் வாங்குவதற்கு சில நாட்களுக்கு முன் 20.4.2019 அன்று கிருபை டிவியை தொடர்பு கொண்டு என் மாமியாரின் டெஸ்ட் ரிபோர்ட்டில் கேன்சர் கட்டி இருக்க கூடாது என்று கிருபை டிவியின் ஜெப ஊழியருடன் சேர்ந்து ஜெபித்து கர்த்தரை அதிகமாய் விசுவாசத்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை.கர்த்தர் எங்களுக்கு ஒரு பெரிய அற்புதத்தை செய்தார். நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த டெஸ்ட் ரிபோர்ட்டில் எங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. கேன்சர் கட்டியாய் இருக்க கூடாது என்று தான் நாங்கள் ஜெபித்தோம். ஆனால் என் மாமியாருக்கு வயிற்று பகுதியில் கட்டியே இல்லை என்று ரிபோர்ட் வர கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார். நாங்கள் வேண்டி கொண்டதற்கும் நினைத்ததற்கும் அதிகமாய் கிரியை செய்த எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள். ஆமென்.

Miraculous Job

Praise the Lord !!! My name is Muthu Lakshmi . I live in the Singapperumal kovil area, Chengelpet district. For many days I have been trying to get a good government job. I was disappointed that nothing turned out positive. So one day I contacted Kirubai TV for prayers that I should get a government job. Within 10 days of praying, the Lord helped me to get a good government job. Glory to God who did miracle in my life.

அற்புத வேலை

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!! என்னுடைய பெயர் முத்து லெட்சுமி. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் வசித்து வருகிறேன். அதிக நாட்களாய் நல்ல ஒரு அரசு பணியில் அமர வேண்டும் என்று பிராயசப்பட்டுக்கொண்டிருந்தேன். எதுவும் கைகூடி வரவில்லை என்ற ஏமாற்றம் தான் எனக்கு. அப்படி ஒரு நாள் கிருபை டிவி யை தொடர்பு கொண்டு நல்ல ஒரு அரசு வேலை கிடைப்பதற்கு ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டேன். ஜெபித்த 10 நாட்களிலேயே கர்த்தர் நல்ல ஒரு அரசு பணியில் அமர எனக்கு உதவி செய்தார். ஜெபத்தை கேட்டு அற்புதம் செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்..

Permanent Employee

Praise the Lord !!! My name is Sumathi. I live in Maraimalai nagar, Chengelpet District. I have been working hard for many days to get a good job. I was tired of not having received anything. One such day, I contacted Kirubai TV for prayers. God did a miracle for me. He granted me a good job the very next day itself. Today I’ve been informed that I am made as a permanent employee in my company. Glory be to God who did miracle in my life.

நிரந்தர ஊழியர்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!! என்னுடைய பெயர் சுமதி. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் வசித்து வருகிறேன். நல்ல ஒரு வேலைக்காக அதிக நாட்களாய் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தேன். எதுவும் வாய்க்காத நிலைமையில் சோர்வுற்று இருந்தேன். அப்படி ஒரு நாள் கிருபை டிவி யை நான் ஜெபத்திற்காக தொடர்பு கொண்டேன். தேவன் எனக்கு அற்புதம் செய்தார். நான் ஜெபித்த மறுநாளே நல்ல ஒரு வேலையை எனக்குக் கட்டளையிட்டார். என் அலுவலகத்தில் என்னை நிரந்தர ஊழியராக மாற்றுவதாய் இன்று அறிவித்தார்கள். எனக்கு அற்புதம் செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்.

God Heard the Prayer

Praise the Lord !!!
My name is Prem Kumar. I live in Madhurandhagam, Chennai. I was very upset as my salary was not paid by the office, crossing 10 days from the beginning of the month. As I could not satisfy the needs of my family, I contacted Kirubai TV for prayers. After praying, I went to the bank in faith and found that my salary was credited in my bank account. Thank God for the miracle on time.

கர்த்தர் ஜெபத்தை கேட்டார்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!!
என்னுடைய பெயர் பிரேம் குமார். சென்னையில் உள்ள மதுராந்தகம் பகுதியில் வசித்து வருகிறேன். மாதம் தொடங்கி 10 நாள்கள் ஆகியும் என்னுடைய சம்பள பணத்தை அலுவலகம் வழங்காததினால் அதிக கலக்கதிற்குள்ளானேன். என்னுடைய தேவைகள் என்னை நெருக்கினபடியினால் நான் கிருபை டிவி யை ஜெபத்திற்காக தொடர்பு கொண்டேன். ஜெபித்த பின்பு விசுவாசத்துடன் நான் வங்கிக்கு சென்று பார்த்தேன். என்னுடைய வங்கி கணக்கில் இல் சம்பள பணம் வரவு செய்யப்பட்டிருந்தது. அற்புதத்தை செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *