கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நீதிமொழிகள் 18:21 வது வசனம் சொல்லுகிறது, மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது. ஆம்! உங்கள் வாயில் இருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். நீங்கள் எதை விதைக்கப் போகிறீர்கள்? எதை பேசப்போகிறீர்கள்? வானத்தையும் பூமியையும் தேவன் தன்னுடைய வார்த்தையினாலே படைத்தார். வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. சூரியனை தன்னுடைய வார்த்தையினால் உண்டாக்கி, பகலை ஆளுவதற்குக் கட்டளையிட்டார். ஆம்! உங்கள் வார்த்தை உருவாக்க வல்லமையுள்ளது. ஆவியின் பிரமாணம் என்ற இந்த நிகழ்ச்சி நிச்சயம் உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும். உங்கள் வாயிலே இருந்து புறப்படுகிற வார்த்தை உங்கள் சிந்தையிலே இருந்து வருகிறது. நீங்கள் எதை பதித்து வைத்திருக்கிறீர்களோ அதையே தான் பேசுவீர்கள். சரியாக பதியுங்கள். சரியாக பயன்படுத்துங்கள். ஜீவனைப் பேசுங்கள், இந்த உலகத்தில் தேவனுடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பது உறுதி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இயேசுவினால் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவர்கள். ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள். அதினால் தான் நாம் பாக்கியம் பெற்றவர்கள். வேத வசனத்தை நம்முடைய வாயில் இருந்து பேசும் படியாக கர்த்தர் பாக்கியம் கொடுத்திருக்கிறார்.